பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட
ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29 இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒருங்கிணைப்பு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், மாணவர்களுக்கு ஒரு நகல் தரப்படும். இதனை மாணவர்கள் வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் ரூ. 175 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒருங்கிணைப்பு மையத்தின் சேவை கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும் என்றார் துணை வேந்தர்.ஒருங்கிணைப்பு மையங்கள் எவை? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை., ஐ.ஏ.எஸ்.இ., சைதாப்பேட்டை, ஸ்டெல்லா மடிடூனா கல்வியியல் கல்லூரி காஞ்சிபுரம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...