அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை, வளர்ச்சி
மற்றும் செழுமைக்கான அடிப்படைகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
கூறியுள்ளார். என்.ஐ.டி., திருச்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு அவர் பேசியதாவது: மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும்
வகையில் NIT -கள் செயல்பட வேண்டியது அவசியம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுப்பதன் மூலமாக மட்டுமே, நாட்டின் பிற்போக்குத்தனத்தையும், வறுமையையும்
ஒழிக்க முடியும்.
ஆசியாவின் முதல் 100 சிறந்த கல்வி
நிறுவனங்களின் பட்டியலில், இந்திய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டில் முதல் 100 இடங்களுக்குள்
இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றன.
ஆனால், அந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் 10 என்பதாக
அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் NIT -களும் இடம்பெற வேண்டும். பிரிக்ஸ்
நாடுகளின் சிறந்த 20 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், 5 இந்திய கல்வி
நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...