பெங்களூரு நகரப் பள்ளிகளுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை நிர்ணயித்துள்ள
போலீஸ் கமிஷனர், எம்.என்.ரெட்டி, பள்ளி பஸ்கள், வாகன டிரைவர்களுக்கு
சீருடை, பேட்ஜ் அணிவதை கட்டாயமாக்கி உள்ளார்.
இதுகுறித்து,
எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுமிகள் மீதான பாலியல்
வன்முறையை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
பள்ளி பஸ்கள், வாகனங்களின் டிரைவர்களும் சீருடை, பேட்ஜ் அணிவது
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறையை மீறும் பள்ளி பஸ், வாகன
டிரைவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துத் துறை
நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி, பள்ளி பஸ்களின் வேகத்தை, ஒரு மணி
நேரத்துக்கு, 40 கிலோ மீட்டராக கட்டுப்படுத்தும், 'ஸ்பீடு கவர்னர்' பொருத்த
வேண்டும். பள்ளி வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கும் மேல், பழையதாக இருக்கக்
கூடாது. பள்ளி பஸ்களுக்கு, மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டும்.
வாகனத்தின் ஜன்னல்
கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டும். கலர் கண்ணாடி பொருத்தக் கூடாது. பள்ளி
வாகன டிரைவர், இளநீல நிற சர்ட், பேண்ட் சீருடை அணிய வேண்டும்.
'லாக்' பெயரை
தெரிவிக்கும் வகையில், பெயர் பலகை, கருப்பு நிற ஷூ அணிய வேண்டும்.
வாகனத்தின் கதவுகளுக்கு சரியான, 'லாக்' பொருத்தப்பட வேண்டும்.
பள்ளி வாகனங்களில்,
இருக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார்போல், பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
பள்ளி வாகனத்தின் மீது, அந்த வாகன உரிமையாளரின் பெயர், விவரம், முகவரி,
தொலைபேசி எண் எழுதியிருக்க வேண்டும். ஒருவேளை, வாகனம் எல்.பி.ஜி., 'கிட்'
பெற்றிருந்தால், அதற்கு சான்றிதழ் கடிதம் வைத்திருக்க வேண்டும். வாகனத்தின்
மீது, எல்.பி.ஜி., டேங்க் பொருத்தக் கூடாது.
புகார்
தெரிவிக்கலாம் : போக்குவரத்துத் துறையின் இந்த விதிமுறைகள், பள்ளி
மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ, பஸ் அல்லது மினி பஸ் உள்ளிட்ட அனைத்து
வாகனங்களுக்கும் பொருந்தும். மாநில போக்குவரத்துத் துறை வடிவமைத்துள்ள
சட்டத்தை மீறிய, சுமார், 5,000 பள்ளிகள், பள்ளி பஸ் டிரைவர்கள் மீது,
வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சீருடை அணியாத பள்ளி பஸ் டிரைவர்கள்
பற்றி, போலீஸ் கன்ட்ரோல் ரூம், தொலைபேசி எண், 100 தொடர்பு கொண்டு,
பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...