உயர் நீதிமன்ற வக்கீல் சுப்பிரமணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
வழக்கில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகிறது.
5 வயதிற்கும்
குறைவான குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதன் மீது நடவடிக்கை
எடுக்க கோரி, அரசுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும்
இப்பள்ளிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட
கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள்
பால் வசந்தகுமார், ரவிசந்திர பாபு ஆகியோர் விசாரித்து 2 வாரத்தில் தமிழக
அரசு மற்றும் 760 பள்ளிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
please close order to close that schools. To implement kg in govt schools
ReplyDelete