.2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட். அதன் முக்கிய அம்சங்கள்:
11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
|
11.54 AM: காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும்.
|
11.54 AM: ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
|
11.54 AM: கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.
|
11.52 AM: விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.
|
11.50 AM: தெலுங்கானாவில்
தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான்
மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
|
11.47 AM: ரூ.500 கோடி செலவில் மேலும் 5 ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும் நிறுவப்படும்.
|
11.45 AM: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்.
|
11.41 AM: ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
|
11.40 AM: பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது.
|
11.39 AM: பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.
|
11.38 AM: வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.
|
11.37 AM: பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
|
11.35 AM: அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.
|
11.33 AM: அந்நிய
முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு
வரப்படும்.
|
11.30 AM: தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது.
|
11.29 AM: ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.
|
11.27 AM: சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்.
|
11.25 AM: நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.
|
11.22 AM: 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
|
11.20 AM: கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
|
11.19 AM: வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
|
11.18 AM: 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
|
11.17 AM: வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.
|
11.15 AM: உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.
|
11.13 AM: வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
|
11.12 AM: அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.
|
11.11 AM: வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
|
11.11 AM: மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும்.
|
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...