கலையாசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்து, ஓராண்டாகியும் எவ்வித பணி உத்தரவும் வழங்காததை கண்டித்து,
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில்,
வரும் ௫ம் தேதி,
தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை:பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, கடந்த 2012-13 ம் கல்வியாண்டில்,
மாநிலம் முழுவதும் உள்ள,
782 பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியானது.
இதற்காக, பணியிட எண்ணிக்கைக்கேற்ப, 3,910 கலையாசிரியர்களுக்கு,
கடந்தாண்டு ஜூன் மாதம்,
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதில்,
நிரந்தர பணி உத்தரவு வழங்கியும்,
பணியிடம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது, ஆசிரியர்களை தேர்வு செய்து, ஓராண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தவிர, நடப்பாண்டின்பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையிலும்,
கலையாசிரியர்கள் பணியிடம் குறித்து எவ்வித தகவலுக்கும் தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில்,
மாநில வேலை வாய்ப்பு அலுவலக தகவல்படி,
தையல்,
இசை,
ஓவியம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு,
காத்திருப்போர் பட்டியலில்,
௧௭,௫௦௦ பேர் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலை தொடர்ந்தால்,
காத்திருப்போர் பட்டியல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, கலையாசிரியர்களின் பணி உத்தரவு குறித்து,
நடவடிக்கை எடுக்க கோரி,
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்கம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில்,
வரும் ஆகஸ்ட் மாதம் ௫ ம் தேதி,
தலைமை செயலகத்தை நோக்கி,
பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டு,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...