அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில்
எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான
புள்ளி விவரம்:
மாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள்,
9,938 நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலை பள்ளிகள்
என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.
இவற்றில் துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில்
47,030 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 36,322 ஆசிரியர்களின்
குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இவர்களில் 9,757 ஆசிரியர்களின் குழந்தைகள்
அரசு பள்ளிகளிலும், 26,565 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில்
பயிலுகின்றனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 50,782 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 32,595 பேரின் குழந்தைகள் பள்ளி
செல்கின்றனர். இதில் 4,281 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும்,
28,314 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் பயிலுகின்றனர்.
அரசு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் தங்களது
குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் போது மற்றவர்கள் எப்படி அரசு
பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்பதை அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிப்
பார்க்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
அது அரசின் தவறு .அரசு பள்ளியில் தான் ஒரே ஆசிரியர் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் 5*5=25 பாடங்களை கற்பிக்கும் ஏமாற்றும் பணி நடைபெறுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் அரசு மருத்துவ &பொறியியல் கல்லூரியில் சேர முடியும் என்று ஓர் அரசு உத்தரவு போட்டால் தனியார் பள்ளிகள் ஈ தான் ஓட்டனும் .தைரியம் உள்ளதா இந்த தமிழ்நாடு அரசு க்கு
ReplyDeleteதனியார் பள்ளியை ஊட்டி வளர்பது அரசு. குறை கூறுவது அரசு ஆசிரியர்களை சூப்பர். தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு எந்தவித அலுவலக பணி இல்லை. ஆனால் அரசு பள்ளியில் கதை அப்படி இல்லை. நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர்&ஆசிரியர்கள் மூட்டை சுமக்கும் தொழிலும் செய்ய வேண்டும் அதுவும் முப்பருவத்திற்கும் சேர்த்து 25 முறை சுமக்கும் பணி சொன்னா புரியாது கடுப்பாகி விடும்
ReplyDeleteஅரசு பள்ளியில் மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படும் சூழல் வந்துவிட்டன காரணம் RTI 2009.ஆறாம் வகுப்பு மாணவன் சொல்லரான் சார் அடிச்சீங்க நீங்க அவ்வளவுதான் என்று மிரட்டல் விடுகிறான். ஆசிரியர்கள் பயத்துடன் பணிபுரியும் நிலையில் உள்ளோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் தகுதி என்ன என்று அனைவரும் அறிவர். அரசுப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களும் திரமையானவர்களே. அப்படிபட்ட திறமையான ஆசிரியர்களைத்தான் அரசு தேர்ந்தெடுத்து அரசுப்பள்ளியில் பணியமர்த்தியுள்ளது.அப்படிப்பட்ட திறமையான ஆசிரியர்கள் பணிபுரியும் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயக்கம் காட்டுவது உண்மைதான்.காரணம் அரசும்தானே. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் ஒரு பெற்றோர்தானே.பாடப்புத்தகத்தில் உள்ளதை கற்றல் என்பது எந்த பள்ளியில் பயின்றாலும் கற்றல் ஒன்றுதான்.தங்கள் குழந்தைகளை அனைத்து அடிப்படை வசதியும் உள்ள கல்வி நிறுவனத்தில் சேர்த்து கல்விபயிற்றுவிக்க அனைத்து உரிமையும் உள்ளது.ஆனால் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும் என்று அரசிடம் கூறுவதற்கு எந்த உரிமையும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை.அப்படியே கடிதம் அனுப்பினாலும் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று எச்சரிக்கை.இப்படிபட்ட நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அரசுப்பள்ளிகளில் சேர்த்தே ஆகவேண்டும் என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.அப்புறம் ஏன் அரசுப்பள்ளிகளில் பணிபுரிகிறீர்கள் என்று கூறலாம்.அப்படிதான் அரசு கூறுகிறது.உன் வேலையைமட்டும் பார் என்று.ஆனால் தனியார் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. நிச்சியமாக தனியார்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை விட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் திறமையானவைகளே.அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள்தான் பிரச்சனை.
ReplyDeleteஅடிப்படை வசதிகள் அரசுப்பள்ளிகளில் முழுமையாக உள்ளது என்று அரசால் வெள்ளைஅறிக்கை விடட்டும்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் அனைத்து அரசுப்பள்ளிகளையும் மூட வேண்டிய அவல நிலை ஏற்படும்.தனியார்தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்.ஆனால் அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டிய அவல நிலை.இங்கு கற்றல் செயல்பாடு எப்படி முழுமையாக இருக்கும்.தனியார் பள்ளியில் வகுப்பிற்கு ஒர் அறை.அரசுப்பள்ளியில் ஐந்து வகுப்பிற்கும் அதிகபட்சம் இரண்டு வகுப்பறை.கழிப்பறை இருக்காது, இருந்தாலும் தண்ணீர் வசதி இருக்காது.எப்படி அரசுப்பள்ளியில் பெற்றோர் நிலையில் சேர்க்கமுடியும்.அரசுப்பள்ளியில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் முதல் ஜனாதிபதி வரை) தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவரையும் கொள்ளுப்பேரன் வரைஅரசுப்பள்ளிகளில் தான் சேர்க்கவேண்டும் இல்லையேல் அரசு ஊழியர்களுக்கு அரசுப்பணியில்லை அரசியல்வாதிகளுக்கு வார்டு உறுப்பினர் முதல் ஜனாதிபதி பதவி வரை எந்த அரசுப்பதவியிலும் இருக்க தகுதிஇல்லை என்று உத்தரவிட்டால் அரசுப்பள்ளியை காப்பாற்றலாம்.இப்படி உத்தரவிட்ட பிறகு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீறினால் பதவி நீக்கம் செய்யுங்கள்.