பிளஸ்
2 பொதுத் தேர்வு போல, பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்க
வேண்டும்,' என, பெற்றோர், மாணவர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிளஸ்
2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் குறைந்துவிட்டதாக சந்தேகப்படும்
மாணவர்கள், குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்கும் முன் அந்த பாடத்திற்கான விடைத்தாள் 'ஜெராக்ஸ்' பெற்று,
அதை சரிபார்த்து, தேவைப்படும் பட்சத்தில் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் நேரடியாக மறுகூட்டலுக்கு
மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் ஜெராக்ஸ் பெற முடியாது.இதனால்,
மறுகூட்டலிலும் ஆசிரியர்கள் 'மதிப்பிட்டது' தான் மதிப்பெண் என்ற நிலை
நீடிக்கிறது.
தற்போது
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய
நிலையில், 15 ஆயிரம் பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், 498
பேருக்கு5 முதல் 25 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளது.மதுரை மாணவி செர்ரி
ரூத்திற்கு 25 மதிப்பெண், நாகர்கோவில் மாணவி கவுசல்யாவுக்கு 7 மதிப்பெண்
அதிகரித்தது. ஆனாலும், அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை உரிய
நேரத்தில் கொண்டாட முடியாமல் போனது.
கல்வியாளர்
ஒருவர் கூறியதாவது: மறுகூட்டலில் 5 மதிப்பெண் வரை வித்தியாசம் என்பதை
ஏற்கலாம். 25 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால், சம்மந்தப்பட்ட ஆசிரியர்
அந்த மாணவரின் விடைத்தாளை திருத்திய போது என்ன மனநிலையில்
இருந்திருப்பார்?, என்றார்.
'ஜெராக்ஸ்'
வேண்டும்: பிளஸ் 2 வை போல் பத்தாம் வகுப்பு தேர்வுக்கும் விடைத்தாள்
'ஜெராக்ஸ்' வழங்க வேண்டும். இதுகுறித்து, உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி
கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழாசிரியர்
கழக செயலாளர் ஜெயக்கொடி தேர்வுத் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...