திருப்பூர் :
"தொற்றா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை கண்காணிப்பு பணியில், வட்டார ஒருங்கிணைப்பாளராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கலெக்டர்
வெளியிட்டுள்ள அறிக்கை: மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், அரசு சாரா தொண்டு
நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் சார்பில், தொற்றா நோய்
சிகிச்சை கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொற்றா
நோய் சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க, வட்டார அளவில் ஓராண்டுக்கு
பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2
கல்வித்தேர்ச்சியுடன், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதில்,
குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள், போதுமான கம்ப்யூட்டர்
அறிவு பெற்றவர்கள், சமுதாய வள பயிற்றுனர் அல்லது சமூக பயிற்றுனராக, மூன்று
ஆண்டுகள் பணியாற்றியவர்கள், 23 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள், வட்டார
ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 5,000 ரூபாய் சம்பளம்
வழங்கப்படும். மாவட்ட அளவில் இரண்டு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட
இயக்குனரிடம், வரும் 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முக தேர்வு வரும்
15ம் தேதி நடக்கும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...