புதிய
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல்
ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட
உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது
விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே,
படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்
31ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கி
கிளையில் அளித்து, அதன் ஒரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின்
கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாள அட்டை
வழங்கப்படும் வரை பணம் செலவின்றி மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக்
கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...