மாணவர்கள்
கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலமாக
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,
புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினி
உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
இதனால் உயர்நிலைப்பள்ளி வரையிலும் படிக்கும் மாணவர்கள் விகிதாச்சாரம்
அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையும் குறைந்துள்ளது. அவற்றில்
குறிப்பிடத்தக்க ஒன்று இலவச பஸ் பாஸ் திட்டம். இந்த ஆண்டு பள்ளி திறந்த
நாளிலேயே புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா
பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை இலவச பஸ் பாஸ் புதிய
மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்களுக்கு லேமினேசன் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்ட் வடிவிலான
அடையாள அட்டையை போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக அரசு வழங்கியது .
கடந்த
ஆண்டில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பலனடைந்ததாகவும் இவ்வாண்டு சுமார் 27
லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாவும்
தகவல்கள் வெளியாகின .ஆனால், இதுவரை புதிய பஸ் பாஸ் வழங்கப்படாததால், அரசுப்
போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி பயணம்
செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட
பஸ் பாஸை ஆகஸ்ட் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
சில
மாணவர்கள் புதிய பஸ் பாஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பழைய பாஸை
பத்திரப்படுத்தவில்லை. நடப்பு ஆண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும்
இதுவரை பாஸ் வழங்கப்படாததால் கட்டணம் செலுத்தியே பயணிக்கின்றனர். தஞ்சை
மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் புதிய பஸ் பாஸ் இதுவரை
வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.இதுகுறித்து போக்குவரத்து துறை
வட்டாரங்களில் விசாரித்த போது, பழைய பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இலவசமாக
பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம்
பேராவூரணி பகுதியில் மட்டும் சுமார் 5, 500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாண்டு
சுமார் 1,500 விண்ணப்பங்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. இதுசம்பந்தமாக பள்ளி
தலைமை ஆசிரியர்கள், கல்வி துறை உயரதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொண்டு பஸ்
பாஸ் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.கல்வி துறை
வட்டாரங்களில் விசாரித்த போது மாணவர்களிடம் புகைப்படம் மற்றும் இதர
தகவல்களை சேகரித்து தர சற்று தாமதம் ஆகின்றது. விரைவில் பஸ் பாஸ்
பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என்றனர்.அதுவரையில் பள்ளி சீருடையுடன்
வரும் மாணவ, மாணவியரை இலவச பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...