மதுரையில்
கல்வி துறையில் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவசரத்திற்கு
'டிரைவிங்' தெரிந்த ஊழியர்களை அழைத்துச் செல்வது தொடர்கிறது.
மாவட்டத்தில்,
முதன்மை கல்வி அலுவலர், மேலுார் மாவட்ட கல்வி அலுவலர், இணை இயக்குனர்
(கள்ளர் சீரமைப்பு) ஆகியோரின் ஜீப்களுக்கு மட்டும் தான் டிரைவர்கள் உள்ளனர். தவிர, மதுரை, உசிலம்பட்டி டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் ஜீப்களுக்கு டிரைவர்கள் இல்லை.
இந்த
ஜீப்களுக்கு அந்தந்த துறையில் பணியாற்றும் 'டிரைவிங்' 'லைசென்ஸ்' உள்ளவர்
அல்லது வேறு துறை டிரைவர்களை மாற்றாக வைத்து ஜீப்கள் ஓட்டப்படுகின்றன.
மேலும், தற்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பயன்படுத்தும் ஜீப் 14
ஆண்டுகளையும், மேலுார் கல்வி மாவட்டம் அலுவலரின் ஜீப் 15 ஆண்டுகளை தாண்டி
இயக்கப்படுகின்றன. இது ஆபத்தானது என கல்வி அதிகாரிகள்
ஆதங்கப்படுகின்றனர்.தவிர, மருத்துவ முகாம்களுக்கு பயன்படுத்தப்படும்
வாகனம், மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்கும் வாகனம் போன்றவையும் மாற்று
டிரைவர்களால் தான் இயக்கப்படுகின்றன.'மாவட்டத்தில் மேலுார்,
உசிலம்பட்டி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் (உயர்நிலை மற்றும் மேல்நிலை)
உட்பட பல பணியிடங்களில் 'பொறுப்பு' அதிகாரிகள் இருக்கும் நிலையில், கல்வி
அதிகாரி வாகனங்களுக்கும் 'பொறுப்பு டிரைவர்கள்' இருக்கின்றனர்.
முதன்மை
கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "இதுகுறித்து ஆய்வு
செய்யப்பட்டு, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்," என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...