தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக
உள்ளன.இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் 'பேனல்' தயார் நிலையில்
இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில், தேனி,
திருச்சி, வேலுார் (எஸ்.எஸ்.ஏ.,), சேலம் உள்ளிட்ட 13 கூடுதல் மற்றும்
முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல்,
உசிலம்பட்டி, நெல்லை, திருப்பூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம்
உள்ளிட்ட 35 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்கள்
பணியிடங்களும் காலியாக உள்ளன.
மேலும், ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி) இயக்குனர் பணி ஓய்வு பெற்றார். அப்பணியிடமும், நுாலகத் துறை இயக்குனர் மற்றும் 3 இணை இயக்குனர்கள் என உயர் கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. 32 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களில், 17 இடங்களில் 'பொறுப்பு' அதிகாரிகள் கவனித்துவருகின்றனர்.
குறிப்பாக, மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நிர்வாக ரீதியிலான பணிகள் முடங்கிப் போயுள்ளன. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், பள்ளிகள் ஆய்வு மற்றும் மேற்பார்வை பணிகளும் பாதித்துள்ளன.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசு திட்டங்கள், உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பு முதன்மை மற்றும் மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கு உண்டு. இவர்கள், 'வழிநடத்தும் அதிகாரிகள்'. பணிமூப்பு அடிப்படையிலான 'பேனல்' கல்வித் துறையில் தயார் நிலையில் இருந்தும், அவர்களை நியமிக்கும் நடவடிக்கை தாமதமாகிறது. இனிமேலாவது காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...