தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
ஆசிரியர்களுக்கிடையே நடந்த கட்டுரை போட்டியில் பெரியகுளம் ஆசிரியர்
ஜெகாநாதன் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ஆர்.ஜெகநாதன்,
37. பெரியகுளம் ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து
வருகிறார். தமிழ்நாடு அறவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கிடையே நடந்த
கட்டுரை போட்டியில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து
கொண்டனர். இதில் ஜெகநாதன் எழுதிய கட்டுரை முதலிடம் பிடித்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலாளர்
தியாகராஜன் சான்றிதழ் வழங்கினார். தேனியில் நடந்த விழாவில் ஆசிரியர்
ஜெகநாதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு, தமிழ்நாடு அறிவியல் தொழில்
நுட்ப மைய இயக்குனர் அய்யம்பெருமாள் பாராட்டி சான்றிதழ் வழங்கி
கவுரவித்தனர். ரங்ககிருஷ்ணன் பள்ளி நிர்வாகம், ஆசிரிய, ஆசிரியைகள்
வாழ்த்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...