கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல்,
இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பாண்டு,
பி.எட்., படிப்புக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களின் அறிவுத்திறன், மிக குறைவாக இருப்பதாகவும்,
ஆய்வு குழு அறிக்கை வெளியிட்டது. எனவே, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்
ஆசிரியர்களின், கற்றல் பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக,
பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற
திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த கல்வியாண்டு
மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும் என
கூறப்படுகிறது.
படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால், பி.எட்., படிப்புக்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி
ஏற்பட்டுள்ளது. இதனால், சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல தனியார் கல்வியியல்
கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது. தவிர,
அரசு கல்வியியல் கல்லுாரியில், நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
அதிகரிக்கும் என தெரிகிறது. கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள் சிலர்
கூறுகையில், 'இரண்டாண்டு பி.எட்., படிப்புக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியாகவில்லை. இருப்பினும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பலர்,
பி.எட்., படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்' என்றனர்.
why ? indha varusham yarume b.ed., la seralainnu new rumour?
ReplyDeleteYes rumour than , BED padichu velai ellamal ur suthaporanunga ethu unmai .
ReplyDelete