ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி
விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர்
மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்.
முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன்
அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார்.
தொடர்ந்து, ராசிபுரம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ்
2 படித்து வந்தார்.
இவர் பள்ளியில் மாதம் தோறும் நடைபெறும்
தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதால், ஆசிரியர்கள் படிப்பில் கவனம்
செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்
தனது பெற்றோரிடம் தொலைபேசியில் அடிக்கடி தெரிவித்தாராம். இந்த நிலையில்,
அண்மையில் நடைபெற்ற வகுப்புத் தேர்விலும் அவர் குறைந்த மதிப்பெண்களைப்
பெற்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அவர் சனிக்கிழமை மாலை
விடுதியில் சக மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தில், ஜன்னலில் துண்டைப்
பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து பள்ளி
நிர்வாகத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட
எஸ்பி. செந்தில்குமார், ராசிபுரம் டிஎஸ்பி வி.ராஜு, ஆய்வாளர் ராஜாரணவீரன்
ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து,
அருண்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கடலூரில்
இருந்து ராசிபுரத்துக்கு வந்தனர். மாணவர் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத
பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அரசு பள்ளியென்றால் பெயரைக் குறிப்பிடும்போது தனியார் பள்ளி என்று வரும்போது பெயரைக் குறிப்பிட ஏன் தயங்க வேண்டும்
ReplyDelete.
தயவு செய்து பள்ளியின் பெயரை குறிப்பிடுங்கள்.....
ReplyDeleteபல பெற்றோர்களுக்கு உதவும்.....
பணத்திற்காகவும், புகழுக்காகவும் இயங்கும் மற்ற இணைய தளங்களை போல் இல்லாமல், நீங்களாவது உண்மையை கூறுங்கள்....