MLA ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப்
பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை.
ஆனால்,அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்தமாணவர்களுக்கும்
மடிக் கணினி வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.சி. வீரமணி: அரசாணையின்படியே மாணவர்களுக்கு மடிக் கணினி
வழங்கப்படுகிறது. சைக்கிளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3ஆயிரம் வரைதான்.
ஆனால், மடிக் கணினியின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்படிப்பவர்களுக்கு மட்டும் மடிக் கணினி
வழங்குவது என்பது அரசின்கொள்கை முடிவு. மேலும், மக்களவைத் தேர்தல் காரணமாக
கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக் கணினி விநியோகம் தடைபட்டது.
இப்போது மடிக்கணினி விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுவரை 1.35 லட்சம்
பிளஸ் 2மாணவர்களுக்கும், 15 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும்
மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மீதமுள்ள மாணவர்களுக்கும்
மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றார்.
what do the minister wants to declare , whether the aided school students will get or not is not clear in his answer.
ReplyDelete