Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருணை அடிப்படையில் பணி - தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து.

          கருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.

          கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்தஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
           அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.உஷாராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு விவரம்: எனது தந்தையின்பெயர் எஸ்.பரமசிவம். கடந்த 1980-ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் வருவாய்த் துறையில்பணியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் கிராம உதவியாளராக பதவி உயர்த்தப்பட்டார். அவர்பணியில் இருக்கும் போது ராஜேந்திரன் என்பவருடன் எனக்கு திருமணம்நடந்தது. இந்த நிலையில் பணியில் இருக்கும் போது, நெஞ்சு வலியால்கடந்த 2008-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இதையடுத்து அதே ஆண்டுஜூலை மாதம் 7-ஆம்தேதி கருணை அடிப்படையில் வேலை வழங்குமாறு அரியலூர் மாவட்டஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனக்கு திருமணம் ஆனதால் கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என 2013-ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி எனது விண்ணப்பத்தை நிராகரித்தார். 2012-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணையின் அடிப்படையில்எனது வேண்டுகோளை நிராகரித்ததாக அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டது.எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து விட்டு, கருணை அடிப்படையில்எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது.விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்மயிலை சத்யா ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்தாலுகா தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரரின்தந்தை இறப்பதற்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டார்.

           மனுதாரர் அவரது கணவர்குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதிக்கு முன்பு திருமணம் முடிந்தபெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள்என 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தஅரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர், எஸ்.ராஜேந்திரன் என்பவரை 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி அவரது தந்தை இறப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார். இதனடிப்படையில் மனுதாரர் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு உரிமை வழங்க முடியாது. இந்தகாலவரையறையை நிர்ணயித்ததில் எந்த தவறும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டது.

           விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆணுக்கும்பெண்ணுக்கும்எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது. இருவரையும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பெண்ணுக்கு எந்தக் காலவரையறையும்நிர்ணயிக்க முடியாது. அதனால், 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது. அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. எனவே,மனுதாரரின் வேண்டுகோளை பரிசீலனை செய்து மூன்று மாதங்களுக்குள்கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 Comments:

  1. Na apply panni Oru varudam aguthu ennum enaku velai varala seikkaram enaku karunai adipadai velai pottu thangaaa sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive