தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்
போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து
பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை
உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி,
நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை
விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு பள்ளிக்
கல்வித் துறைக்கு உத்தரவிட்டனர்.
கடலூர் மாநகர் கல்வி உரிமைக்கான பெற்றோர்
அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த
மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கொண்டு வரப்பட்ட பிறகும்
மெட்ரிக்., ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்ற பெயர்களில் பள்ளிகள்
செயல்பட்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர்களை நீக்க
நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...