மாணவர்களிடம்
கனிவான முறையில் நடந்து, அவர்களுக்கு, பயிற்சி அளித்து, அரசு பள்ளிகளின்
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்' என, தலைமை
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், சி.இ.ஓ., பொன்னையன் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், அனக்காவூர் ஆகிய
பகுதிகளில் செயல்படும், 68 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இரு நாள் பயிற்சி வகுப்பு, ஆரணி வட்டார வளமையத்தில் நடந்தது.
பயிற்சி
வகுப்பை, சி.இ.ஓ., பொன்னையன் துவக்கி வைத்து பேசியதாவது: திருவண்ணாமலை
மாவட்டத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
குறைந்துள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஏழை, எளிய
குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ப
பேசிப்பழகி, அன்பாக பாடம் கற்பிக்க வேண்டும். தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க,
தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...