போபால்
: மத்திய பிரதேசத்தில், லஞ்சம் - ஊழலை ஒழிக்க, மாநில
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அதிரடி
நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய
அரசு பொறியாளரின் வீட்டை,பள்ளி, அங்கன்வாடி
மையமாக மாற்றி, அரசு அதிகாரிகளை
கலங்கடித்துள்ளார்.
ம.பி.,யில், பா.ஜ., முதல்வர் சிவ்ராஜ்
சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி
நடக்கிறது. அரசுத் துறையில் லஞ்சம்
- ஊழலை ஒழிப்பதில், முதல்வர் சவுகான் தீவிரம் காட்டி
வருகிறார்.முக்கிய அரசு அலுவலகங்களுக்கு
திடீர் 'விசிட்' அடித்து, அதிகாரிகளை
பீதியடையச் செய்யும் சவுகான், ஊழல் புகார்களில் சிக்கும்
அதிகாரிகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி
வைத்தியத்தை அளித்துள்ளார்.போபாலைச் சேர்ந்த, அரசு துணை பொறியாளர்,
அரவிந்த் திவாரி மீது ஊழல்
குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த விசாரணையில்,
அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதில்,
திவாரி கோடிக்கணக்கில் ஊழல் புரிந்தது நிரூபணம்
ஆனது.இதையடுத்து, திவாரிக்கு சொந்தமான சொத்துகளில் சிலவற்றை அரசு?டமையாக்க மாநில
அரசு உத்தரவிட்டது. அரசாணையின் படி, திவாரிக்கு சொந்தமான,
இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்துகள் கையகப்படுத்தப்பட்டன. அதில், திவாரியின் வீடு,
அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி
மையமாக மாற்றப்பட்டது.
இதை, மாநில முதல்வர் சிவ்ராஜ்
சிங் சவுகான் அரசு?டமையாக
அறிவித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதுகுறித்து,
செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், ''அரசு
அதிகாரிகள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஊழல்
புகாரில் சிக்கும் அதிகாரி யாராக இருந்தாலும்,
அவரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு?டமையாக்கப்படும். திவாரியின்
சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது, அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும்,''
என்றார்.
மாநில முதல்வரின் அதிரடி நடவடிக்கையால், அரசு அதிகாரிகள் கதி கலங்கி உள்ளனர். மக்களின் வரிப் பணத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துகளை, மக்கள் பயன்பாட்டிற்காக அரசு?டமையாக்கும் அரசின் நடவடிக்கைக்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. முதல்வரின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...