Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு
09.05.2013 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை  நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

31.05.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.
14.06.2013
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
07.07.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம் பேர், விண்ணப்பித்தனர்.
21.07.2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.
29.07.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
07.10.2013
தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டன.
11.10.2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
22.10.2013
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, அக். 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும்,14 இடங்களில் 2,276 பேருக்கு நடந்தது. 
24.10.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான 212 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
06.11.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
23.12.2013
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.  
31.12.2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெற்றது.
04.01.2014
முதுகலை தமிழ் ஆசிரியர்களின், 605 பேரின் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),  வெளியிட்டது.
09.01.2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல்  வெளியிடப்பட்டது; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
10.01.2014
தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
17.01.2014
திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
18.02.2014
விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு பட்டியல்  வெளியிடப்பட்டது.
21.02.2014
முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு  பணிநியமன கலந்தாய்வு நடைபெற்றது. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, மீதமுள்ள‌ 11 பாடங்களுக்கான‌ இறுதி தேர்வு பட்டியல் எப்போது வரும் என்ற கேள்விக்கே விடைதெரியாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்





1 Comments:

  1. amma thala,....idavum manavargal ethirkalathai ninaithu........M.R

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive