ஜூலை
இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்"
என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/
1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கணக்கை எப்படி உருவாக்குவது?
- தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )
- அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
- உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token)
- செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
- உங்கள் கணக்கு தயார்!!
- உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
- மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
- தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்!
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
- விண்ணப்பப் படிவம்:ITR-1
- உதவிக் கோப்பு (ITR-I Help Manual)
இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.
- படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
- ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
- அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
- அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும்.
- "Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
- அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
- வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
- இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.
- உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
- இடது பக்கத்தில் உள்ள "Submit Return" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்
- வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
- உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், "No" கொடுக்கவும்.
- Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் "Next" என்பதைச் சொடுக்கவும்
- வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள்.
- தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!
இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!
- எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form) சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
- மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!]
முகவரி:
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!
நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்
(இடையில் Space வராது)
என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே?
மிக எளிமையான முறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நேரில் கூறியது போல இருந்தது. நன்றி. இதில் எனக்கு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. pfx file என்றால் என்ன? அதை எப்படி உருவாக்குவது என தெரிந்த அன்புள்ளம் கொண்டவர்கள் கூறுங்கள்.அ.ந.கரூர்.
ReplyDelete