அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள்
நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன்
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.
பொன்விழாகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 50 ஆண்டு கள் நிறைவடைந்ததை யொட்டி பொன் விழாஅப் பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி யன்தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்று பேசினார்.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார். மேலும் இப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மற்றும் இந்த பள்ளிக்கு நிலம் வழங்கியவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பழனி யப்பன் பேசியதாவது:-கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த காலங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 20-வது இடத் திற்கு மேல் தான் வந்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது 2013-14 கல்வி ஆண்டில் மாநில் அளவில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த காலங்களில் 26 இடத்தில் இருந்து தற்போது 22-வது இடத்தை பிடித்துள் ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அவர் களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படு வதும் காரணமாகும்.
ஆசிரியர்கள் நியமனம்:
அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த ஆண்டு 3500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும் முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப் பட உள்ளார்கள். இந்த பள்ளியில் தற்போது14 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப் பள்ளிக்கு கலையரங்கம் மற்றும் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விழாவில் அசோக்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம்நாகராஜ், ஆவின் தலைவர் தென்னரசு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் அர்ச்சுணன், மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது, ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், அனை வருக்கும்கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார், மாவட்ட கல்வி அலுவலர் சசிகலாவதி உள்பட பலர் கலந்து கொண் டார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...