தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூலை 10) கூடுகிறது. அரசுத் துறைகளுக்கு
நிதி ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் அன்றைய
தினத்தில் இருந்து தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மொத்தம் 22
நாள்கள் கூட்டத் தொடர் நடைபெறும். இதை பேரவைத் தலைவர் பி.தனபால்
செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
சட்டப் பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை கூடியது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை 22 நாள்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
துறை வாரியாக நிதியினை ஒதுக்கக் கோரும் மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். எந்தெந்த நாள்களில் எந்தெந்த துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பேரவைத் தலைவர் தனபால் கூறியது:
ஜூலை 10-ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை, 11-இல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 14-இல் உள்துறை, 15-இல் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.
16-ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, 17-இல் உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறை, 18-இல் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 21-இல் எரிசக்தித் துறை, 22-இல் தொழில் துறை.
23-ஆம் தேதி போக்குவரத்துத் துறை, 24-இல் பொதுப் பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பாசனம்), 25-இல் பால்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை, 30-இல் வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, 31-இல் தேதி வேளாண்மைத் துறை.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, 4-இல்
கைத்தறி மற்றும் துணி நூல், தகவல் தொழில்நுட்பவியல் துறை, கதர், கிராமத் தொழில்கள், கைவினைப் பொருள்கள், 5-இல் இந்து சமய அறநிலையத் துறை, 6-இல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
7-ஆம் தேதி நீதி நிர்வாகம், சிறைச் சாலைகள், சட்டத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, வனம், சுற்றுச்சூழல், 8-இல் வருவாய்த் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 11-இல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, 12-இல் நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பொதுத் துறை, மாநிலச் சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்.
பங்கேற்றோர் யார்? அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப் பேரவையின் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தேர்தலுக்குப் பிறகு... தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை ஏற்கெனவே சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பிறகு நிதிநிலை அறிக்கைக்கு பேரவையின் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த இயலாமல் போனது.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், இப்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...