கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணித் தேர்வுக்கான விடைகளை
வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணிக்காக தமிழக கூட்டுறவுத் துறை
பணியாளர் ஆணையம் கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அறிவிப்பு
வெளியிட்டது. இந்தத் தேர்வுக்காக 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 2.23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி
வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் தேர்வுக்கான விடைகள், கட் ஆஃப்
மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்தத் தேர்வில் பங்கேற்ற
பலர் வினாத் தாள்களின் விடைகள், கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிடக் கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி,
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடந்தது.
விசராணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைகளை
கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும். மேலும்,
தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தேர்வர்களின் கட் ஆஃப் மதிப்பெண்களுடன்
சேர்த்து வெளியிட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை
நிரப்பும்போது தகுந்த முறைப்படி தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...