சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிவது தொடர்கிறது.
இதையடுத்து, பள்ளிக் கட்டிடங்களின் உறுதியை ஆய்வு செய்யவும், ஆபத்தை
தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28ம் தேதி 11 மாடிக் கட்டிடம்
இடிந்து விழுந்தது. அதில் 61 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து
செங்குன்றத்தில் இயங்கி வந்த தனியார் குளிர்பான நிறுவனத்தின் சுவர் 5ம்
தேதி அதிகாலை இடிந்து விழுந்த சம்பவத்தில் 11 கூலித் தொழிலாளர்கள் நசுங்கி
இறந்தனர். நேற்று காலை சாந்தோமில் இரண்டு மாடிக் கட்டிடம்இடிந்து
விழுந்தது. ராணுவ வீரரின் மனைவி, 5 வயது குழந்தை ஒன்றும் அதிசயமாக உயிர்
தப்பினர்.தொடர்ந்து இதுபோல கட்டிடங்கள் இடிந்து விழுவதை அடுத்து சிஎம்டிஏ
அனைத்து கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து வருகிறது. உரிய அனுமதி
பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை யும் இடித்து தள்ள பரிந்துரை
செய்துவருகின்றனர்.இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்
அனைத்து பள்ளிக் கட்டிடங்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பள்ளி
வளாகங்களில் திறந்த கிணறுகள் இருந்தால் அவற்றை உரிய முறையில் மூடி
வைக்கவும், ஆபத்தான இடங்கள் இருந்தால் அந்த இடங்களை தடைசெய்யவும் பள்ளிக்
கல்வித்துறை அவசரமாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு செய்யவும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள் ளது.சென்னை மட்டும் அல்லாமல் அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்கள் அனைத்தும் இப்போது கண்காணிப்பு வட்டத்துக்குள் வந்துள்ளன. அபாயகரமாக உள்ள பள்ளி வகுப்பறைகள் இருந்தால் அதற்கானமாற்று ஏற்பாடுகளை செய்யவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...