தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள்
(டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்)
உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்
பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை
பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில்,
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான
பணிமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 30 முதல் ஜூலை2வரை நடந்தது.இதில்,ஒவ்வொரு
மாவட்டத்திலும் மனமொத்து பணிமாற தயாராக இருந்தவர்களுக்கு, அந்தந்த
டி.இ.இ.ஓ.,க்களே உத்தரவுகளை வழங்கினர். இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், இந்த
நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், இந்தாண்டு அவர்களால் வழங்கப்பட்ட
உத்தரவுகளை நிறுத்தி வைக்க, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால்,ஜூலை 2ல் மாறுதல் உத்தரவு பெற்ற நுாற்றுக்கணக்கான
ஆசிரியர்கள்,விருப்ப பள்ளிகளில் பணியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, பணியாற்றிய பள்ளியில் இருந்தும் பணிவிடுவிப்பு உத்தரவு
பெற்றுவிட்டதால் அந்த பள்ளிகளுக்கும் அவர்கள் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:
ஜூலை 2ல் 'கவுன்சிலிங்' பங்கேற்று, மனமொத்த பணிமாற்றத்திற்கான உத்தரவு
பெற்றேன்.ஜூலை4ல் நான் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளியில் பணிவிடுப்பு உத்தரவு
பெற்றேன்.ஆனால், கவுன்சிலிங்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர
சென்றால், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
"இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் 'வெயிட்' பண்ண சொல்லியுள்ளனர்,"
என்கின்றனர். அதிகாரிகள் 'எதற்காக' இப்படி சொல்லியுள்ளார்கள் என
தெரியவில்லை, என்றனர்.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இதுவரை டி.இ.இ. ஓ.,க்களே
இப்பணியிட மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கினர்.இனிமேல் 'மனமொத்த
மாறுதலும்' இயக்குனர் கட்டுப்பாட்டிற் குள் சென்றுவிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete