எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெற்றவரில்,மறுகூட்டலுக்கு
விண்ணப்பித்தவருக்கு, மறு மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.
தமிழகத்தில், மே, 23ம் தேதி வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவில்,
மதிப்பெண் குறைந்த மற்றும் மறு கூட்டல் விவரம்தேவைப்பட்ட மாணவர்கள், மாநில
தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்தனர்.அவர்களின், விடைத்தாள் சரி
பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கான தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், மறு கூட்டல்
கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் சான்று வழங்க தேர்வுத்துறை
உத்தரவிட்டது. ஆனால், நேற்று தான், மறு கூட்டல் மதிப்பெண் சான்று, அந்தந்த
மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு புதிய
மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில்,
எஸ்.எஸ்.எல்.ஸி., மதிப்பெண் விவரங்களை, மறு கூட்டல் கேட்டு, 170 மாணவர்கள்
விண்ணப்பித்தனர். அதில், 25 மாணவருக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
மதிப்பெண்ணை காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.அந்த
மாணவருக்கான, மறு மதிப்பெண் சான்று, மாவட்ட கல்வி அலுவலகத்தில்
வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வர், ஏற்கனவே பெற்ற மதிப்பெண் சான்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றை பெற்றுச் செல்லலாம். மறு கூட்டலில், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மட்டுமே சான்று வழங்கப்படும். மற்றவருக்கு, ஏற்கனவே பெற்ற மதிப்பெண் சரியாக இருப்பதால், அதே மதிப்பெண் சான்றை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, சம்பந்தப்பட்ட மாணவர், உடனே மறுகூட்டல் மதிப்பெண் சான்றை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...