Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் முதல்வரின் பாதம் தொட்டு எழுதும் கண்ணீர் கடிதம்

         நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,  நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள் அணைவருக்கும் சுமார் 40 வயதை கடந்து விட்டது அம்மா, அம்மா நாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு எங்கள் உழைப்பையும் , வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.

        ஆனால் நாங்கள் பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதும் அல்லாமல் பள்ளியில் சம்பள பில் போடுவது, கணினி மூலம் உள்ள அணைத்து வேலைகளையும் பள்ளியில் செய்தோம். மற்றும் முதன்மை கல்வி அலுவர் அலுவலகத்தில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் எப்போதும் கூப்பிட்டாலும் ஓடி போய் இரவு பகல் அல்லாது வேலை செய்தோம். திடிரென்று சென்னையில் கணினி சம்பந்த பட்ட வேலை என்றால் உடனே பிள்ளை, மனைவி என்று பார்க்காமல் முதன்மை கல்வி அலுவலர் சொன்னவுடன் செய்தோம். கடந்த ஆண்டு மாணவர்களின் விவரத்தை கணினி பதிவு செய்ய இரவு , பகல் என்று வேலை செய்தோம். மாண்வர்களின் உதவித் தொகையை பெற கணினியில் பதிவு செய்வது என்றும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை பதிவு செய்வது என்று என்று எங்கள் உழைப்பு மற்றும் இளமையையும் அரசுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொடுத்து விட்டோம். அம்மா நீங்கள்தான் எங்கள் மீது கருணை காட்ட வேண்டும். 


நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம்.

அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.

இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள்.  இப்போது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் உள்ளோம். 


 முதல் தேர்வு :-

 652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகி விட்டோம்.

 இரண்டாவது தேர்வு :-

பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.

7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள்,  அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.

நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா,  நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.



** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.

** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
** தற்போது மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கூட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடபட்டுள்ளது.



நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.



இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.



மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும் பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று கூறும் நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை 

 அம்மா நாங்கள் அணைவரும் மிகவும் மனம் நொந்து உள்ளோம் அம்மா , வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கிறோம் அம்மா . ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

 நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.

அம்மா இடிபாடுகளில் சிக்கிவர்களை ஆதரிக்கும் உங்கள் நல்ல உள்ளம், ஈராக்கில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் உங்கள் நல்ல உள்ளம், மீனவர்களை காக்க உறுதி செய்யும் உங்கள் நல்ல உள்ளம்  எங்களையும் காக்க வழி செய்ய வேண்டும்.  அம்மா நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அம்மா, எங்கள் வாழ்வை காப்பாற்ற உங்களால்தான் முடியும் அம்மா, அம்மா நாங்கள் என்றும் உங்களை வழியில் இருப்போம் அம்மா நன்றி அம்மா.


ஆசிரியர் தேர்வு வாரியம்  இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம் அம்மா, 



இப்படிக்கு .

 கணினி ஆசிரியர்கள்




2 Comments:

  1. dear padasalai admin comments are not clear font size is very small.please change the font style.old style was nice

    ReplyDelete
  2. Dear padasalai admin, v hav a gud opinion abt u. Please don't publish anything abt d dismissed computer instructors. It s sub-standard......it is not gud for the teaching community.....it s like begging....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive