Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

           நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகா பட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர் அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.

           பரிசு பெற்ற மாணவியரை, தனியாக சந்தித்து பேசியபோது...''நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் எனும் தலைப்பில், அறிவியல் கண்காட்சி என்றதுமே, மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தோம். ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு, தெர்மாகோலில் வடிவமைப்பு கொடுப்பதை விட, புது திட்டத்தை அமல்படுத்தலாம் என்று முடிவானது. உடனே, இன்டர்நெட் பட்டனை தட்ட, நதிநீர் இணைப்பு குறித்து படித்தோம். இது, இந்தியாவுக்கான மெகாபிளான்.கோவையில் இருக்கும், குளங்களை இணைக்கற திட்டத்தை பற்றி யோசிப்போம் என, களத்தில் குதித்தோம். ஆதரவாக, சவுமியாவின் அப்பா செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்களின், துணை கிடைத்தது. இதுவரை, குளங்களை இணைக்க போட்ட பிளான் குறித்து, நிறைய தகவல்களை சேகரிச்சோம். ஏதோ நடைமுறை சிக்கல் இருப்பதை உணர்ந்து, நீராதார வழிதடங்கள் குறித்த, வரைபடம் உருவாக்கினோம்.இதில், மேட்டுப்பாளையம் வழியாக செல்லும், கீழ்பவானி அணை ஆற்றுநீரையும், ஆழியாறு அணையில் இருந்து வரும் நீரையும், நொய்யல் ஆற்றுப்பாதையுடன், இருகூர் மற்றும் வெள்ளலூர் பகுதிகளில் இணைப்பது குறித்து திட்டமிட்டோம். இதில், இருவேறு பகுதிகளில் இருந்து வரும் நீரை, நொய்யலுக்கு கொண்டு வருவதற்கான மாதிரி பாதை உருவாக்கப்பட்டது. கீழ்பவானி ஆற்றுநீரை, சிறுமுகை அருகில் இருந்து திருப்பி, தென் திருப்பதி, காரமடை பின்பகுதி, நீலாம்பூர் வழியாக, இருகூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ., தூரம் விவசாய நிலங்களில் பாதை உருவாக்க முடியும். இதேபோல், ஆழியாறு அனை நீரை, பொள்ளாச்சி அருகில் இருந்து திருப்பி, கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, செட்டிப்பாளையம் வழியாக, வெள்ளலூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ.,பாதை உருவாக்க வேண்டும். இந்த இருகூர் மற்றும் வெள்ளலூர், ஆற்றுநீரால், ஒரத்துப்பாளையம் வரையுள்ள, குளங்கள், ஆறுகளுக்கு நீர் கிடைக்க வழிவகை செய்ய முடியும்.இந்த திட்டத்திற்கு, 110 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலம், மூன்று மீட்டர் ஆழம் கொண்ட பாதை உருவாக்க, 185 கோடி ரூபாய் செலவாகும். இதேபோல், நீராதாரங்களுக்காக இணைக்கப்படும் குளங்கள், குட்டைகளை, தூர்வாரி, குழாய் அமைக்க, 55 கோடி ரூபாய், நொய்யல் ஆற்றை தூர்வாரி, சுற்றுப்புறங்களை வலுப்படுத்த, 35 கோடி ரூபாய் என, மொத்தத்தில், 275 கோடி ரூபாய் திட்டமதிப்பீடாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையே, வல்லுனர்கள் மேலும் எளிமையாக்கி, செயல்படுத்தினால் நீராதாரங்களை அதிகப்படுத்த முடியும்...இப்படி மூச்சு விடாமல், பேசி முடித்தனர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்.




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive