Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கம்!

         பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.

         பல்லடம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளிக்கு வந்து செல்ல இலவச வேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.

          இதன் துவக்கவிழா, ரோட்டரி சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி, நாற்காலி, மேஜை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்லடம் கிளை சார்பில் வழங்கப்பட்ட கணினி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

          விழாவிற்கு, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எம்.கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில், இலவச வேன் வசதியை துவக்கி வைத்து . பள்ளிக்கான தளவாட பொருள்களை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் வழங்கினார். பல்லடம் நகராட்சித் தலைவர் பி.ஏ.சேகர், நகராட்சி ஆணையாளர் நாராயணன், தலைமை ஆசிரியர் ஆனந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.




4 Comments:

  1. ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவிகள் செய்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.....

    ReplyDelete
  2. நன்கொடை அளித்த உள்ளங்களுக்கு இந்த பேரணாம்பட்டு ஒன்றிய ஆசிரியரின் நன்றி

    ReplyDelete
  3. hi frds paper 1, bc, female 71.21% job kedika chance iruka..pls reply me...

    ReplyDelete
  4. Excellent. But All Govt Students this scheme will be reached.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive