பேரவையில்
நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பண
பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. ஆசிரியர் தேர்வாணையம் இட
ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது. தனியார் கல்லூரிகள் அதை செய்வதில்லை.
ராமமூர்த்தி:
பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. எனவே கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும்.
பழனியப்பன்:
கல்வித் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ராமமூர்த்தி:
தமிழ்நாட்டில் 3500 கல்லூரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
பழனியப்பன்:
ஏற்கனவே 1900 பணியிடம் நிரப்ப உத்தரவிடப்பட்டது. 1623 பணியிடம் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
ராமமூர்த்தி:
சமச்சீர்
கல்வியை கொண்டுள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர
வேண்டும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தனி துறை இருக்க கூடாது.
அமைச்சர் வீரமணி:
தற்போதுள்ள முறையில் குறைபாடு இருந்தால் கூறுங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும்.
திண்டுக்கல் பாலபாரதி(மார்க்சிஸ்ட்):
சமச்சீர்
கல்வியில் அனைத்தும் சமம் என்று சொல்லும் போது மெட்ரிக் பள்ளிகளுக்கு
தனித் துறை ஏன்? அந்த துறையை கலைக்க வேண்டும். அப்போது தான் அரசு
பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேருவார்கள். மெட்ரிக் பள்ளி களில் பல பாடப்
பிரிவுகள் இருப்பதால் அதிக அளவு மாணவர்கள் அங்கு செல்கிறார்கள்.
வீரமணி:
இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ராமமூர்த்தி:
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
வீரமணி:
தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ராமமூர்த்தி:
ஈரோட்டில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டும்.
வீரமணி:
அரசு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மாற்றப்படும்.
இவ்வாறு ராமமூர்த்தி பேசினார்.
இக் கல்வியாண்டில் 2014-15ல் தழிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ் படிப்பு ஏமாற்றத்தை உண்டு செய்துள்ளதை எந்த மந்திரியும் சட்டசபையில் கேள்வி எழுப்பவில்லை.மாறாக இது அம்மா அவர்கள் பார்வைக்கும் கொண்டுவரவில்லை. தமிழ்நாட்டில் 5 மருத்துவகல்லூரிகள் தகுதியில்லை என 750 இடங்களை மத்திய அரசு ஒடுக்கியது. ஆதாலால் 750 மருத்துவப்டீப்பு படிக்க இருந்த மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதற்கு அரசு மருத்துவக்க்ல்லூரியிலேயோ ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 100 இடங்கலை அதிகபடுத்தி இந்த வருடம் ஈடுசெய்யலாமே? அல்லது புதியதாக் தொடங்கயுள்ள் அரசு ம்ருத்துவ்கக்ல்லூரிய்ல் (சுயநிதிபிரிவாக self-supporting) ஆக கூடுதல் பணம் வசூலித்து அரசு மருத்துவக்க்ல்லூரியில் சேர்க்க ஏன் உயர்கல்வி அமைச்சர்கள் சிந்திக்கவில்லை. கொஞ்சம் பொதுநலத்தையும் பார்ககவும். இதையும் அரசியல்லாக்காமல் செய்ய்லாமே? 2வ்து கவுன்சில் 21/7/14 நடப்பதற்கு முன்னர் இந்த சட்ட்மன்ற கூட்ட்த்தொடரில் 110ன்கீழ் இதனை அம்மா அறிவிக்க அமைச்ச்ர்கள் நடவடிக்கை எடுத்து ம்ருத்துவ்த்துறையை ஊக்குவிக்கலாமே?
ReplyDelete