Home »
» ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி
பணியிடங்கள் தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத
தேர்ச்சி இலக்கை அடைய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் 10ம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு
செய்யப்பட்டது. சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் தயாராக உள்ளநிலையில்
பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தொடர்ந்து காலியாகவே உள்ளன. ஜூன் 17-29ம் தேதி வரை கலந்தாய்வில் ஏராளமான,
ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய பள்ளிகள், சொந்த மாவட்டங்களுக்கு பணியிட
மாறுதலாகி சென்று விட்டனர். இதனால் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ள 225
பணியிடங்கள், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களால்
தின வகுப்புகள், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த
இயலவில்லை.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாநிலம்
முழுவதும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது
மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என்றார்.
மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். காலம் பொன் போன்றது. தாமதிக்காதீர் நண்பர்களே.
இந்த ஜிஒ வில் அக்காடமிக் மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது மிகவும் முரன்பாடாக உள்ளது. ஏனென்றால் இவை அனைத்தும் டிஇடி தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகள். எனவே இந்த ஜிஒ வும் ரத்து செய்யயப்படவேண்டிடும்.
சிந்தியுங்கள் செயல்படுங்கள் நண்பர்களே. போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிஒ வை மாற்ற வேண்டியது மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயமாகிறது.
9003540800
9442799974