தமிழக மீனவர்கள் கைது, மவுலிவாக்கம் கட்டிட விபத்து மற்றும் பெட்ரோல் விலை
உயர்வு போன்ற பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் தமிழக சட்டப்பேரவை
கூட்டம்நாளை மறுத னம் கூடுகிறது.
2014-2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம்தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடை பெற்றதால் மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துவிட்டது.எனவே, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடுகிறது.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதையொட்டி இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம்நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள். அப்போது, நாளை மறுதினம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து எத்தனை நாட்கள்நடத்தலாம், எந்தெந்த தேதியில் எந்த மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன்படி, நாளை மறுதினம் தொடங்கும் பேரவை கூட்டம், தொடர்ந்து ஒரு மாதம் வரை நடக்க வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் முதல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், திமுக, தேமுதிக,மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.குறிப்பாக, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் விபத்து, மின் வெட்டு, மீனவர் பிரச்னை ஆகிய வற்றை குறித்து சட்டப் பேரவையில் பிரச்னை கிளப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தரப்பும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...