தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
2014-2015ஆம்
கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாக
பழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள்
தங்களைக் தற்காத்துக் கொள்ள வழிவகை செய்யும்
பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி,
நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும்
தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள
482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே
பயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில்
அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும்,
கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்
என்பதற்காக, பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2013-2014ஆம் கல்வியாண்டில் முதன்முறையாக விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர். அதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...