ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் அரசு
உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 220
மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 7 ஆசிரியர்கள் இருக்க
வேண்டிய இடத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 3 வாரங்களாக 2
ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தினர். இதனால் பருவத்தேர்வுக்கான பாடங்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் இன்று
காலை ஒன்று திரண்டனர். சென்னையில் இருந்து வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு தாசில்தார் மோகன், வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
காலை 9 மணியில் இருந்து போராட்டம் நடந்தது. அதிகாரிகள் மாணவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...