Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்: நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

            வங்கிகள் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவ மாணவிகளின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

         தர்மபுரி மாவட்டம் வறட்சியான மாவட்டமாக இருந்த போதிலும் கல்வியில் மாநிலத்தில் முதலாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் அதிகப்படியான குக்கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கு போதிய அளவு தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள், விவசாயிகள், பிழைப்பு தேடி கூலி தொழிலுக்காக வெளி மாவட்டமான திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் வெளி மாநிலம் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

குழந்தைகள் நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், பட்டப்படிப்பு படிக்க இன்ஜினியரிங், டாக்டர் போன்ற படிப்புகளில் சேர வசதி இல்லாமல் படிக்க வழியில்லாமல் இவர்களும் பெற்றோர்களுடன் கூலி வேலைக்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர். இதனால் மேற்படிப்பு தொடர வசதியில்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் வங்கிகள் கொடுக்க மறுக்கின்றன.

குறிப்பாக கடத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கி, சில்லாரஅள்ளி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் வங்கிகள், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கிராமப்புற மாணவர்களை புறக்கணித்து வருகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் போதுமான ஜாமீன் கொடுத்தும் ஏதாவது காரணம் கூறி வங்கி நிர்வாகம் தட்டிக்கழித்து வருகிறது.

இதுகுறித்து கலெக்டரிடம் கல்வி கடன் கொடுக்காததை மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே கல்விக்கடன் கிடைக்கும் என நம்பி இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்கள் கல்விக்கடன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களை கல்வி நிறுவனங்கள் பணம் கட்டச்சொல்லி மாணவர்களை வகுப்பில் பயில அனுமதி மறுக்கின்றனர்.

ஆகவே கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு உடனே கல்விக்கடனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive