மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 20
பணி: பண்ணை இயந்திர பயிற்சி மற்றும் பரிசோதனை இன்ஸ்ட்டியூட்டில் வேளாண்மை
பொறியாளர்
காலியிடங்கள்: 01 (பொது).
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 30 இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் அல்லது வேளாண்மை பொறியியல் பாடத்தில் பி.இ
முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சந்தை மற்றும் ஆய்வு இயக்குனரகத்தில் மூத்த சந்தை அதிகாரி
காலியிடங்கள்: 01 (பொது).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும.
கல்வித் தகுதி: வேதியியல், வேளாண்மை வேதியியல், பண்ணை வேதியியல்,
பண்ணையியல் துறைகளில் முதுகலை பட்டம் அல்லது ஆயில் தொழில்நுட்பம், உணவு
தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், பண்ணை தொழில்நுட்பம் ஆகிய
துறைகளில் பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முன் அனுபவம்
அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் துறையில் டிப்ளமோ முடித்து ஓராண்டு
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பொது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் விமானம் ஓட்டும்
பயிற்சி துணை இயக்குநர்
காலியிடங்கள்: 02 (பொது).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் +2 முடித்து பைலட்
லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். 1500 மணி நேரங்கள் பைலட்டாக
பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: மக்கள் நல்வாழ்வு பொது இயக்குநரக சேவை, மத்திய மருந்துகள் தர
கட்டுப்பாட்டு அமைப்பில் இணை பார்மாசூடிக்கல் கெமிஸ்ட்
காலியிடங்கள்: 01 (பொது)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பார்மாசூடிக்கல் வேதியியல், ஆர்கானிக் வேதியியல், பார்மசி
போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
அனுபவம் சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சண்டிகார் லேபர் பீராவில் புலனாய்வாளர்கள் (நிலை - 1)
காலியிடங்கள்: 02 (பொது).
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொருளியல், பயன்பாட்டு பொருளியல், வணிக பொருளியல்,
எக்னோமெட்ரிக்ஸ் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் அல்லது கணிதம், புள்ளியியல்
பொருளியல் ஒரு தாளுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
பணி: பொது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில் துணை மண்டல
வேலைவாய்ப்பு அலுவலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சமூகநலம் அல்லது சமூகப்பணி அல்லது பொருளியல் அல்லது
புள்ளியியல் அல்லது உளவியல் அல்லது வணிகவியல் அல்லது கல்வி போன்ற துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுரங்கத்துறையில் துணை மினரல் எக்னாமிஸ்ட் (நுண்ணறிவு)
காலியிடங்கள்: 02 (ஒபிசி - 1, பொது - 1).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மைனிங் பொறியில் துறையில் முதுகலை பட்டம், நிலத்தியல்,
பயன்பாட்டு நிலத்தியல், பொருளியல் - (சுரங்க பொருளியலுக்கு முன்னுரிமை)
போன்ற துறைகளில் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும்.
பணி: கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கப்பல்கள் பொது இயக்குனரகத்தில்
நிர்வாக இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்):
காலியிடங்கள்: 05 (பொது - 3, ஒபிசி - 2).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெலி கம்யூனிகேசன்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்
மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தில்லி ஜல் போர்டு, தில்லி என்சிடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்
காலியிடங்கள்: 05 இடங்கள் (எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 3).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயதுவரம்பு: ஒபிசியினருக்கு 38க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 40க்குள்ளும்
இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவ துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஏதாவதொரு ஸ்டேட் வங்கியில் செலான் மூலமோ
அல்லது நெட் பேங்கிங் மூலமோ செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி., எஸ்டி.,
மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
வலயதுவரம்பு: 17.07.2014 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின்
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2014.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, எழுத்து தேர்வு, அனுபவங்கள் போன்ற
முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Email0 Print A+ A A-
இந்த பகுதியில் மேலும்
மத்திய அரசுத்துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு
டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி
13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி
139 உதவி பேராசிரியர் பணி காலியிடங்கள்: எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு
இந்தோ - திபெத்திய காவல் படையில் பணி
இந்திய கப்பல் கழகத்தில் பணி
பரோடா வங்கியில் அதிகாரி பணி
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு CTCRI நிறுவனத்தில் பணி
திருச்சி NIT-ல் எலக்ட்ரீசியன் பணி
மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம்: அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா
தொடக்கி வைத்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...