Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.

         வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
 
          டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
 
           எனது விண்ணப்பம் காலதாமதமாக ராணுவ கல்லூரிக்கு சேர்ந்துள்ளது. அதற்குள் மாணவர்கள் சேர்க்கை முடித்து கல்லூரி தொடங்கிவிட்டது என்று கூறிவிட்டனர். எனவே,எனக்கு ராணுவ கல்லூரியில்இடம் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:மனுதாரர் கோரிக்கை நியாயமானது. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதை ராணுவ கல்லூரிக்கு அனுப்ப தாமதப்படுத்தியது டிஎன்பிஎஸ்சி தான். மாணவனுக்கு இடம்கிடைக்காததற்கு தேர்வாணையத்தின் செயல்தான் காரணம். ஆவணங்கள் மூலம், தேர்வாணையம்தாமதப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது.

ராணுவத்தில் சேர விரும்பியுள்ள மாணவனை, தேர்வாணையம் அலை கழித்து உள்ளது. மாணவனின் எதிர்காலம் கருதி அவனுக்கு ராணுவ கல்லூரியில் உடனே இடம் தர வேண்டும். ராணுவக் கல்லூரியில் சேர்த்து கொள்ளவேண் டும். மாணவனின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடக்கூடாது. எனவே மாணவணை ராணுவ கல்லூரியில் சேர்த்து கொள்ளவேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive