அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை
விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில்
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின்
கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும்
மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை. அடித்தட்டு
மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற
மோகம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட
அரசு பள்ளிகளின் கற்பித்தல் திறனை நம்பி தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில்லை.
இவ்வாறு பலரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில்
அரசு பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்து
வருகிறது. சில ஆண்டுகளில் அரசின் துவக்க பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த
வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பதை விருதுநகர்
மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் புள்ளி விவரம் உணர்த்துகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...