வீடுகளில் 'ஏசி' வெடித்தது, 'பிரிட்ஜ்'
தீப்பிடித்தது என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை வெடிக்குமா?
தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி
நிம்மதியாக தூங்க முடியும் என்ற சந்தேகக் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம்
கீழப்பாக்கத்தில் 'ஏசி' வெடித்து தந்தை, மகள் என இருவர் பலி. கடந்த வாரம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 'பிரிட்ஜ்' தீப்பிடித்ததால் ஒரே
குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மூச்சு திணறி பலி என தொடர்ந்து நடந்த இந்த
விபத்துகள் நமக்கும் எச்சரிக்கையை தருகின்றன.
'ஏசி', 'பிரிட்ஜ்' பராமரிப்பு குறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பினோம்.
மின்இணைப்பில் தவறு மதுரையை சேர்ந்த 'ஏசி' பராமரிப்பு நிபுணர் ஆனந்த்
கூறியதாவது: 'ஏசி'யில் உள்ள உபகரணங்களில்
ஏற்படும் பழுதால் வெடித்துவிடாது. மின் இணைப்பு சரியாக இல்லை எனில் விபத்து
ஏற்படும். குறிப்பாக 'ஏசி' பொருத்தும் போது, இணைப்பு வயரை மெயின் போர்டில்
இருந்து தனியாக எடுக்க வேண்டும். ஒரு டன் 'ஏசி'க்கு 2.5
எஸ்.கியு.எம்.எம்., ஒயர்களையும், 1.5 டன், 2 டன் 'ஏசி'க்கு 4
எஸ்.கியு.எம்.எம்., ஒயர்களையும், எம்.சி.பி., சுவிட்சுகளையும் பயன்படுத்த
வேண்டும். ஒயரில் கண்டிப்பாக 'எர்த்' இருக்க வேண்டும். தரமான 'வோல்டேஜ்
ஸ்டெப்லைசர்' பயன்படுத்த வேண்டும்.'ஏசி'யில் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கு
அடிப்படை காரணமே மின் இணைப்பில் உள்ள தவறு தான்.மூன்று மாதத்திற்கு ஒரு
முறை கண்டிப்பாக 'ஏசி'யை சர்வீஸ் செய்ய வேண்டும். சர்வீஸ் செய்யாமல்
இருந்தால் அதில் தூசுகள் அதிகமாக சேர்ந்து விடும். ஒரு மணி நேரத்தில்
'கூல்' ஆக வேண்டிய அறையில், 2 மணி நேரம் ஆகும். இதனால் மின்சார தேவை
அதிகமாகும்.ஜன்னல் கண்ணாடி கதவுகளில் கனமான காட்டன் துணி ஸ்கிரீன் போட
வேண்டும். அறையை முழுமையாக காற்றோட்டம் இல்லாமல் அடைக்காமல் சிறு
காற்றோட்டம் இருக்குமாறு, இடைவெளிவிட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ள
வேண்டும். அறையில் உலோக பொருட்கள் இருந்தால் அறை குளிர அதிக
நேரமாகும்.இவ்வாறு கூறினார்.
'எர்த்' பிரச்னை இருக்கிறதா? 'பிரிட்ஜ்' பராமரிப்பாளர்
சிங்கதுரை கூறியதாவது: பிரிட்ஜ்
பயன்படுத்துவோர் கண்டிப்பாக 'ஸ்டெப்லைசர்' பயன்படுத்த வேண்டும். தண்ணீர்
பயன்பாடு இதில் இருப்பதால் சிறு அளவில் 'ஷாக்' இருந்தால் 'ஒயரிங், எர்த்'
பிரச்னை இருக்கிறதா என பார்க்க வேண்டும். கம்பிரசரின் மேல் பகுதியில் தான்
வீணாகும் தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த 'பிளாஸ்டிக் டிஷ்ஷில்'
ஓட்டைகள் இருந்தால் தண்ணீர் கம்பிரசரில் பட்டு
அது 'ஷாட் சர்க்கியூட்' ஆகி விபத்தை ஏற்படுத்தும். பிரிட்ஜ் பின் பகுதியில்
இருக்கும் நூலாம்படையும் விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் இவற்றை
அடிக்கடி கண்காணிக்க வேண்டும். எலிகள் ஒயர்களை கடிக்காதவாறு
கவனிக்கவும்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்வது அவசியம். பிரிட்ஜ்
உள்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். எலட்ரிக்கலில் சிறு குறையும்
இல்லாமல் இணைப்பு கொடுத்து பிரிட்ஜை பயன்படுத்தினால் எத்தனை ஆண்டுகளானாலும்
கவலையில்லாமல் கையாளலாம். இவ்வாறு தெரிவித்தார்.
nanri very useful message. thanks of them both
ReplyDeletethanks to padasalai.very yseful information
ReplyDelete