Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..

*5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.

*வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.தேசிய அளவில் வேளாண் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.நிலங்களுக்கு ஏற்ற பயிர்களைதேர்வு செய்ய மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*தபால் நிலையங்கள் மூலமாக பெறப்பட்டு பயன்படுத்தாமல் உள்ள நிதிகளை முறையாகப் பயன்படுத்த திட்டம்.

*விவசாய கட்டமைப்புகளை அதிகரிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*குறுகிய கால ஊரக மறு சுழற்சி நிதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு.

*கிராமப்பற தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குடு.

*சுற்றுலாத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரிப்பு.

*இந்தியாவில் ஏற்கனவே உள்ள துறைமுகங்களை தரம் உயர்த்த ரூ.11 ஆயிரம் கோடி நிதி.

*தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் சூரிய ஒளி மின்சார திட்டம் உருவாக்கப்படும். இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

*இந்தியாவில் கூடுதலாக 15,000 கி.மீ தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் பதிப்பு.

*தேசிய நெடுஞ்சாலைகள் துறையில் மாநில நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.37,887 கோடி முதலீடு. இதில் ரூ.3000 கோடி வடகிழக்கு மாநில தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதியும் அடக்கம்.

*16 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

*வேளாண் தொலைக்காட்சி துவக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு கவனம்.

*ஒரு குடும்பத்துக்கு 2 வங்கிக் கணக்குகள் தொடங்க வசதி செய்து தரப்படும்.

*அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே வாடிக்கையாளர் இணைப்பு மையம் துவக்கம்.

*பெண் குழந்தைக்ளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். பெண் குழந்தையின் கல்வி, திருமணத்தக்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் துவக்கப்படும்.

*தமிழகம் உட்பட 6 இடங்களில் ரூ.200 கோடியில் ஜவுளி தொழில்நுட்பம்.

*அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.

*புதிதாக 6 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.

*கிடங்குகளின் திறனை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு.

*நதிகள் இணைப்புக்கு தீவிர முயற்சி எடுக்கப்படும்.நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*காஞ்சி, மதுரா உள்பட தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி.

*வெளிநாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த திட்டம்.

*நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கப்படும்.

*காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு.அதில், காப்பீட்டுத் துறையில் 49 சதவீதமாக அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும்.பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு மூலம் கூடுதல் நிதி திரட்டப்படும்.

*இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

*இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

*24 மணி நேரமும் மின் வசதி என்பதே மத்திய அரசின் இலக்கு.

*சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் இ - விசா சேவை அறிமுகம்.இந்த இ-விசா சேவை இன்னும் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்.

*பெண்கள் பாதுகாப்புக்காக உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்படும்.

*மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு.

*பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் பிரெய்லி முறை அறிமுகம்.

*இந்தியாவில் மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பூர்வாஞ்சள் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்படும்.படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும்.

*தேசிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.5 ஐஐடிக்கள் மற்றும் 5 ஐஐஎம்கள் புதிதாக உருவாக்கப்படும்.

*கிராமங்கள் அனைத்தும் பிராட் பேண்ட் மூலமாக இணைக்கப்படும்.

*தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50,047 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*குறைந்த செலவில் வீடுகளை கட்டும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு.

*மதராசாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive