காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும்கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்கள் (டேட்டா, என்ட்ரி ஆபரேட்டர்)பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கதிட்டம்,மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் கணினி விவர பதிவாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிகளுக்காக தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்,
பணியிட எண்ணிக்கை : 16,
கல்வி தகுதிகள் : பட்டப்படிப்புடன் கூடிய டி.சி.ஏ,தட்டச்சு உயர்நிலை (தமிழ், ஆங்கிலம்),
சம்பளம் : ரூ 6,000.
இந்த நியமனம்ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக நியமனமாகும்.விண்ணப்பங்களை காஞ்சிபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்டஅலுவலகத்தில் வேலை நாட்களில் பெறலாம். செய்தி வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். நேர்முக தேர்விற்கானதேதி பின்னர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்கள்,
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட திட்டஅலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம்,
இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,
காஞ்சிபுரம் - 631 501
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27230456 என்ற தொலைபேசியில்தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெசமாவா?....நெசமாவா??
ReplyDeleteI hope that the part time special teachers (computer) will be free from data entry work like EMIS online entry etc. in future
ReplyDelete