வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை
ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம்
வகுப்பு படிக்கும் டில்லி மாணவர் சகில் பன்சால்.
Inkspire என்ற பெயருடைய ஒரு கலைப்
பத்திரிகையின்(art magazine) முதன்மை ஆசிரியராக அந்த மாணவர் திகழ்கிறார்.
"படைப்புத்திறன் பெற்றவர்கள், தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு
களம்தான் இந்தப் பத்திரிகை" என்கிறார் அந்த மாணவர். இவர் டில்லியின்
பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறார்.
இவரின் சாதனையைப் பாராட்டி, CBSE தலைவர் வினித் ஜோஷி, ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.
Inkspire பத்திரிகை குழுவில், ஏற்கனவே 600 பேர்
இணைக்கப்பட்டுள்ளார்கள். போட்டோகிராபர்கள், கிராபிக் டிசைனர்கள் மற்றும்
Musicians போன்ற பணி நிலைகள் அவற்றுள் அடக்கம். "சோசியல் மீடியாவை நான்
பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்துவேன்" என்று சகில் பன்சால் கூறுகிறார்.
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Inkspire என்ற பெயரில் ஒரு facebook page தொடங்கப்பட்டது. பின்னர் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை
Inkspire ஈர்த்ததாலும், பலர் பன்சாலை அணுகியதாலும், தற்போது, Inkspire,
பத்திரிகையாக வெளிவந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...