மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில்
வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள்
உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர்கள். அதிகபட்சமாக கல்வித்துறையில் 15
பேர், ராணுவத்தில் 10 பேர், காவல் துறை மற்றும் போக்குவரத்துக் கழகத்தில்
தலா ஐந்து பேர் உள்ளனர்; தேசிய பஞ்சாலை கழக மேலாளராக ஒருவர் பணிபுரிகிறார்.
இக்கிராமத்தைச் சேர்ந்த
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கோபால் கூறியதாவது:காலை 8 மணிக்கு கிளம்பி,
மானாமதுரையில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு 10 கி.மீ., நடந்து செல்வோம்; மாலை
6 மணிக்கு வீடு திரும்புவோம். அப்போது 'சிக்ஸ்த் பார்ம்' எனும் 11ம்
வகுப்புக்கு, சிவகங்கை செல்ல வேண்டும்; அதன் பின் கல்லுாரிப்படிப்பு. நான்
'சிக்ஸ்த் பார்ம்' முடித்து மருத்துவத்துறையில் சேர்ந்தேன். கடந்த 1996ல்
ஓய்வு பெற்றேன். கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்த பலரும் அரசுப்பணியில்
இருப்பதற்கு, கல்வியறிவு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வும்
தான் காரணம். இங்கு வசிக்கும் அரசு ஊழியர்கள் தவிர, நிறைய பேர்
ெவளியூர்களிலும் வசிக்கின்றனர்.இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...