ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில்
சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி
அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.
சாரணர் இயக்கம் தமிழக சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை மானிய கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர்
ந.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:–
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தை சீரிய முறையில்
செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.1.14
கோடி செலவினம் மேற்கொள்ளப்படும்.
சோலார் விளக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 96 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில்
உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை
பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசு பழங்குடியினர்
உண்டி உறைவிட பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து
154 மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ரூ.550 மதிப்புள்ள ஒரு
சூரிய எரிசக்தியுடன் கூடிய ‘‘சோலார்’’ விளக்கு வழங்கப்படும்.
ஆயத்த பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்
இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவ,
மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம்
வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணம் அளிக்கப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள், ஐ.ஐ.எம். போன்ற மத்திய
கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. போன்ற மேற்படிப்பில் சேர, பொது அனுமதி
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100
பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் அந்த தேர்வை
எழுதுவதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் ஆயத்த
பயிற்சி அளிக்கப்படும்.
முதலுதவி பெட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி
பயிலும் மாணவர்களுக்காக ஆயிரத்து 346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின
உண்டி உறைவிட பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவி பெட்டி வழங்கப்படும்.
இந்த துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75
மேல்நிலைப்பள்ளிகளில் 32 ஆயிரத்து 112 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களின்
சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு ‘‘நாப்கின் பர்னர்’’
என்ற சுகாதார குட்டை தகளி வழங்கப்படும். வட்டாட்சியர் அலுவலகம் நீலகிரி
மாவட்டத்தில் 32 ஆயிரத்து 813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட
தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகள் 40
கி.மீ. தொலைவில் உள்ளதால், அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை
எளிதில் சென்றடைய குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் தனி வட்டாட்சியர்
அலுவலகம் தோற்றுவிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான
விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்வு ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆயிரத்து 397 பள்ளிகளில்
பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, 100 மேல்நிலைப்பள்ளிகள்
மற்றும் 107 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வாயிலாக யோகா
பயிற்சி அளிக்கப்படும். இந்திய குடிமைப்பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (தொகுதி–1) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும்
பழங்குடியின தேர்வர்களுக்கு, முதன்மைத் தேர்வினை எழுத ஆகும் இடைநிகழ்
செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த தொகை, மத்திய அரசின் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு
நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் புதிய
அறிவிப்புகளை வெளியிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...