நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 105 பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் 96 ஐ.பி.எஸ் பணியிடங்களும், ஒடிஷாவில் 75 ஐ.பி.எஸ்
பணியிடங்களும் காலியாக உள்ளன. தமிழகத்தில் 263 ஐ.பி.எஸ் பணியிடங்களில் 52
இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி
கூறினார்.மகாராஷ்ட்ராவில் 72 இடங்களும், ஆந்திராவில் 51 இடங்களும் ஐ.பி.எஸ்
எனப்படும் இந்திய காவல் துறை பணியில் இடங்கள் நிரப்பப்படவில்லை. நாடு
முழுவதும் 4 ஆயிரத்து 728 ஐ.பி.எஸ் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 3
ஆயிரத்து 798 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
விவசாயம் ,மருத்துவம் ,கல்வி & பாதுகாப்பு துறையில் குறைவான பணியாளர்கள் இருப்பது நம் நாட்டின் அவமானம் ...
ReplyDelete