மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டதில்
உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியான மய்மூனா கான்
தங்கள் கிராமத்தில் சாலை வசதி மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில
முதல்வரான சிவராஜ் சிங் சவுகானுக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். அவரது
கடிதத்தின் பலனாக இன்று அந்த கிராமம் சாலை வசதியை பெற்றுள்ளதாக பத்திரிக்கை
செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு கடிதங்களுக்கு எவ்வித பலனும்
இல்லாத நிலையில், மனம் தளராமல் மூன்றாவது கடிதத்தையும் மெய்மூனா எழுதினார்.
அவரது தொடர்ச்சியான கடிதத்தின் பலனாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் வளர்ச்சி திட்டத்தின்
நிதியை பயன்படுத்தி அதிகாரிகள் மெய்மூனாவின் கிராமத்திற்கு சாலை வசதி
செய்து கொடுத்தனர். மெய்மூனாவின் கடிதத்தில் சாலை வசதி பெற்ற ஒட்டுமொத்த
கிராமமும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் திளைத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...