தமிழகத்தில், அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவேடுகளின்படி, 84.78 லட்சம் பேர், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து, அமைச்சர் மோகன், சட்டசபையில் கூறியதாவது:தமிழகத்தில், 37
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களும், கம்ப்யூட்டர்
மயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.கடந்த 2013 - 14ல்
மட்டும், 15.23 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு
செய்துள்ளனர். கடந்த மார்ச்,31ம் தேதி வரை, பதிவு செய்து, வேலைக்காக
காத்திருப்போர் எண்ணிக்கை, 84.78 லட்சம்.கிராமப்புற இளைஞர்களுக்காக, 32
மாவட்ட தலைநகரங்களில், 385 ஊராட்சி ஒன்றியங்களில், தன்னார்வ பயிலும் வட்டம்
துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயார்
செய்யப்படுகின்றனர்.இவ்வாறு, மோகன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...